Loading...
 
Latest News
17/07/2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே! 2026/07/17 இன்று கனடா அன்புநெறி ஊடாக சீடர்ஸ் பவுண்டேஷன் கனடா ஒழங்கமைப்பின் ,Wecan அமுல்படுத்தலில் நிதி அன்பளிப்பு சாந்தா பஞ்சலிங்கம் அன்பரின் ஆதரவுடன் வீடு திறப்பு நிகழ்வு. இவ் நிகழ்வு பயனாளி றொபட் றீகன் குடும்ப தலைமையில் விடத்தல்தீவு பங்கு தந்தை அடிகளார், ஜெகநந்தன் ஆசீர்வாதத்துடன் நானும் கிராம குழக்களின் ஒன்றிய தலைவர் திரு,தென்றல்மாறன் இணைந்து வீட்டை சுப முகூர்த்த நேரத்தில் திறந்து வைத்தோம். இவர் கடந்த யுத்ததில் காயமடைந்த மாற்றுத்திறனாளியாவர். எனவே இவ்வாறனா பல மாற்றுத்திறனாளிகள் வீடுகள்,காணிகள் இல்லாமல் வட,கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர் மற்றும் பல போராளிகள்,,மாவீர்கள் குடும்பங்களும் இவ்வாறாக வாழ்கின்றார்கள். மனிதநேய மிக்க பல வகையான வாழ்வாதார உதவிகளை செய்கின்ற அமைப்புக்கள் உதவ முன்வருமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.

15/07/2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே! 2026/07/15 இன்று அமெரிக்கா வாஷிங்டன் மாநில இலங்கை தமிழ்ச் சங்கம் மேற்படி நிறுவன நிதி அன்பளிப்பு சுயதொழில் முயற்சிக்கான நிதி WeCan maanthai ஊடாக வழங்கப்படது. கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் வசித்து வரும் க, சசிகலா அவர்கள் கடந்த யுத்தத்தில் தனது கணவரையும் இழந்தவர் அத்தோடு இவரும் ஒரு மாற்றுத்திறனாளி ஒரு கால் இல்லை இதைவிட மிகவும் சோகமான விடையம் இவருடைய 2 வது மகன் வயது 16விசேடதேவையுடைய பிள்ளை. மூத்த பிள்ளை பெண் பிள்ளை தரம் A/L படிக்கின்றார். எனவே சரியான குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக இவ் நிறுவனம் WeCan ஊடாக செய்துள்ளார்கள். வாஷிங்டன் மாநில இலங்கை தமிழில் சங்கம் எம்மோடு மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதார மேம்பாடு பல் வேறுபட்ட உதவிகளை செய்வதற்கு புதிய அமைப்பாக இணைந்துள்ளன. இவ் அமைப்பு வட,கிழக்கு மற்றும் மலையக மூன்று மாகாணங்களிலும் கல்வி,மருத்துவ, வாழ்வாதாரம் போன்ற பல மனிதநேய மிக்க பணிகளை செய்ய போவதாக எம்மிடம் கூறியுள்ளனர் இவ் செயல் திட்டத்திற்கான ஆதரவை WeCan அமைப்பு வழங்கும். இவ் பயனாளிக்கான காசோலையை WeCan வழங்கி வைத்தோம்.
No Organisation Month Year
Turnover Amount
1.  Special Needs Support organization (Velichcham) June 2026 196,430.00
2.  Special Needs Support organization (Wecan) June 2026 2,200,804.00
3.  Special Needs Support organization (Velichcham) May 2026 137,660.00
4.  Special Needs Support organization (Wecan) May 2026 13,500.00
5.  Special Needs Support organization (Velichcham) April 2026 90,010.00
6.  Special Needs Support organization (Wecan) April 2026 3,579,379.00
7.  Special Needs Support Union (Vavuniya District) April 2026 50,000.00
8.  Special Needs Support organization (Wecan) March 2026 3,641,140.00
9.  Special Needs Support organization (Velichcham) March 2026 153,325.00
10.  Special Needs Support organization (Velichcham) February 2026 153,460.00
11.  Special Needs Support organization (Wecan) February 2026 2,381,902.00
12.  Special Needs Support organization (Velichcham) January 2026 132,920.00
13.  Special Needs Support organization (Wecan) January 2026 2,662,320.00