8th September, 2026
வணக்கம் எம் இனிய உறவுகளே!
2026/9/8 கனடா அன்புநெறி அன்பாளார் Mr. மயூரன் அவர்களின் தலைமையில் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்களை நாம் சந்தித்தோம்.
இவ் சந்திப்பூடாக குச்சவெளி மாற்றுத்திறனாளிகளுடைய நிர்வாக செயல்பாடுகள் WeCan maanthai அமைப்பூடாக முன்னெடுக்கப்படுகின்றன செயல்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியிருந்தோம்.
இவ் சந்திப்பில் திருமலை Mr. கிருஷ்ணா, Mr.ராகவன், மற்றும் குச்சவெளி சமூக சேவை உத்தியோகத்தர்Mr. குகன கலந்துகொண்டியிருந்தனர். இவ் சந்திப்பு முடிந்த பின்னர் சமூக சேவை காரியலத்தில் குச்சவெளி Mr.குகன் தலைமையில் 2ம்கட்டமாக சந்திப்பு நடைபெற்றது. இதில் குச்சவெளி அமைப்பின் நிர்வாகம் கலந்து கொண்டார்கள் தற்போது WeCan maanthai ஊடாக மேற்கொண்டு வரும் குச்சவெளி மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பாக சமூக சேவை உத்தியோகத்தருக்கு விரிவாக நாம் தெரிவித்துள்ளோம். இவ் பணியை ஏனைய திருமலை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எமது மாற்றுத்திறனாளிகளுடைய அமைப்புகளுக்கும் செயல்படுத்தபட இருக்கின்றது.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலக கோரளை பற்று தெற்கு புதிய பாதை மாற்றுத்திறனாளிகளுடைய நிர்வாகத்துடன் சந்திப்பு அன்புநெறி கனடாவால் வழங்கப்பட இருக்கும் நிதி ஆதரவு Mr. மயூரன் அவர்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது. தொடரும் எமது மனிதநேய புனித பணி.நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.