11th September, 2026
வணக்கம் எம இனிய உறவுகளே!
2026/9/11 இன்று அன்புநெறி கனடா அமைப்பின் தலைவர் Mr.குலம், Mr. மயூரன் இரு அன்பாளர்கள் கிழக்குமாகண இணையும் கரங்கள் இணைப்பாளர் Mr. ராகவன் உட்பட்ட எமது Wecan maantha அமைப்புக்கு விஜயம் செய்தனர்.
இவ் சந்திப்பில் WeCan நிர்வாகம் கலந்து கொண்டார்கள். செயல்பாடுகள் தொடர்பாக எமது பொருளாளர் Mr. சுதன் விரிவாக கூறினார்.ஏனைய உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
WeCan தொழிற்கூட பொறுப்பாளார் Mr.அறிவு தொழிற்கூட உற்பத்திகள் தொடர்பான செயல்பாடுகளை கருத்துக்களை தெரிவித்தார். விசேடமாக அன்புநெறி கனடா. நிதி ஆதரவுடன் மாற்றுத்திறனாளிகள் வெளிச்சம், மற்றும் தேனீ ஒன்றிய இரு அமைப்புகளுக்குமான கட்டடத்துக்கான காணியை அன்புநெறி தலைவர் மற்றும் Mr. மயூரன் எமது குழுவினர் பார்வையிட்டு உறுபடுத்தி கொண்டோம். விரைவாக கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. தொடரும் எமது மனிதநேய புனிதப்பணி ஏனைய மாவட்டங்களுக்கும்.நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.