Loading...
 
2026/07/17 இன்று கனடா அன்புநெறி ஊடாக சீடர்ஸ் பவுண்டேஷன் கனடா ஒழங்கமைப்பின் ,Wecan அமுல்படுத்தலில் நிதி அன்பளிப்பு சாந்தா பஞ்சலிங்கம் அன்பரின் ஆதரவுடன் வீடு திறப்பு நிகழ்வு.

17th July, 2026

வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே!

                 2026/07/17 இன்று கனடா அன்புநெறி ஊடாக சீடர்ஸ் பவுண்டேஷன் கனடா ஒழங்கமைப்பின் ,Wecan அமுல்படுத்தலில் நிதி அன்பளிப்பு சாந்தா பஞ்சலிங்கம் அன்பரின் ஆதரவுடன் வீடு திறப்பு நிகழ்வு.

 

இவ் நிகழ்வு பயனாளி றொபட் றீகன் குடும்ப தலைமையில் விடத்தல்தீவு பங்கு தந்தை அடிகளார், ஜெகநந்தன் ஆசீர்வாதத்துடன் நானும் கிராம குழக்களின் ஒன்றிய தலைவர் திரு,தென்றல்மாறன் இணைந்து வீட்டை சுப முகூர்த்த நேரத்தில் திறந்து வைத்தோம். இவர் கடந்த யுத்ததில் காயமடைந்த மாற்றுத்திறனாளியாவர். எனவே இவ்வாறனா பல மாற்றுத்திறனாளிகள் வீடுகள்,காணிகள் இல்லாமல் வட,கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர் மற்றும் பல போராளிகள்,,மாவீர்கள் குடும்பங்களும் இவ்வாறாக வாழ்கின்றார்கள். மனிதநேய மிக்க பல வகையான வாழ்வாதார உதவிகளை செய்கின்ற அமைப்புக்கள் உதவ முன்வருமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 

 

குறிப்பு, சீடர்ஸ் பவுண்டேஷன் கிழக்குமாகண திருக்கோயில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் மண்டானை,கயத்திரிபுரம் கிராமங்களில் வீடுகள் அமைத்து வழங்குதல் தொடக்கம் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகள் பல வேலை திட்டங்களை வட,கிழக்கு பகுதிகளிள் செயல்படுத்தி முன்னெடுத்து வருகின்றார்கள்.