15th July, 2026
வணக்கம் எம் இனிய தமிழ் உறவுகளே! 2026/07/15 இன்று அமெரிக்கா வாஷிங்டன் மாநில இலங்கை தமிழ்ச் சங்கம் மேற்படி நிறுவன நிதி அன்பளிப்பு சுயதொழில் முயற்சிக்கான நிதி WeCan maanthai ஊடாக வழங்கப்படது.
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் வசித்து வரும் க, சசிகலா அவர்கள் கடந்த யுத்தத்தில் தனது கணவரையும் இழந்தவர் அத்தோடு இவரும் ஒரு மாற்றுத்திறனாளி ஒரு கால் இல்லை இதைவிட மிகவும் சோகமான விடையம் இவருடைய 2 வது மகன் வயது 16விசேடதேவையுடைய பிள்ளை. மூத்த பிள்ளை பெண் பிள்ளை தரம் A/L படிக்கின்றார். எனவே சரியான குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக இவ் நிறுவனம் WeCan ஊடாக செய்துள்ளார்கள்.
வாஷிங்டன் மாநில இலங்கை தமிழில் சங்கம் எம்மோடு மாற்றுத்திறனாளிகளுடைய வாழ்வாதார மேம்பாடு பல் வேறுபட்ட உதவிகளை செய்வதற்கு புதிய அமைப்பாக இணைந்துள்ளன. இவ் அமைப்பு வட,கிழக்கு மற்றும் மலையக மூன்று மாகாணங்களிலும் கல்வி,மருத்துவ, வாழ்வாதாரம் போன்ற பல மனிதநேய மிக்க பணிகளை செய்ய போவதாக எம்மிடம் கூறியுள்ளனர் இவ் செயல் திட்டத்திற்கான ஆதரவை WeCan அமைப்பு வழங்கும்.